அருண் விஜய் 
சினிமா

‘யானை’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். 

யானை படத்தின் போஸ்டர்

இப்படம் கிராமத்து பின்னணியில் தயாராகி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி யானை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.