அருண் விஜய் 
சினிமா

நாகூர் தர்காவிற்கு திடீர் விசிட் அடித்த அருண் விஜய்

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அருண் விஜய்யின் 33வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது நாகப்பட்டினத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அருண்விஜய் படப்பிடிப்பிற்கு இடையே நாகப்பட்டினத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற தர்காவான நாகூர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT