உடனே மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். கோவிட் பாசிட்டிவ் என்பதாலும் அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதனாலும் கூடுதல் கவனம் எடுத்து ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை தந்திருக்கிறார்கள். இப்பொழுது அருண்பாண்டியன் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்கிறார். நடந்த அத்தனையையும் அந்த மருத்துவமனை தந்த சிகிச்சை பற்றியும் மருத்துவர்களின் நடத்தை பற்றியும் விரிவாக சமூக வலைதளத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் எழுதியிருக்கிறார்.