ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி 
சினிமா

சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி?

நடிகை அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மாலை மலர்

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார்.

அபர்ணா பாலமுரளி

இந்நிலையில், இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.