அனுசுயா பரத்வாஜ் 
சினிமா

சில்க் சுமிதாவாக நடிப்பது உண்மையா? - நடிகை அனுசுயா விளக்கம்

சில்க் சுமிதா பயோபிக்கில் நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மாலை மலர்

தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சில்க் சுமிதா போன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ், புதிய தொடக்கம், கோலிவுட் என குறிப்பிட்டிருந்தார். இதனால் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அனுசுயா, ‘நான் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் சுமிதாவாக நடிக்கவில்லை’ என கூறியுள்ளார்.