அக்ஷரா ஹாசன் 
சினிமா

அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்

கமலின் இளைய மகள் அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில் பிரபல நடிகையின் மகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தனுஷ் விர்வானி கூறும்போது, “அக்‌ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார். 

அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின. இதனால் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம். எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் எனது தாய் ரதி அதிர்ச்சியாகி அக்‌ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் பேச முயன்றார். நான் தடுத்து விட்டேன்” என்றார். ரதி தமிழில் கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT