விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ் படத்தின் போஸ்டர் 
சினிமா

விஜய் சேதுபதியின் மவுனப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மணிரத்னம் பட நடிகை

இந்தியில் தயாராகும் ‘காந்தி டாக்ஸ்’ படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான ‘புஷ்பக விமானா’ படமே கடைசியாக வந்த மவுன படமாகும். இந்த படத்தை தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் வெளியிட்டனர். தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப்படம் உருவாகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இப்படத்தை இயக்குகிறார். 

அதிதி ராவ், விஜய் சேதுபதி

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை அதிதி ராவ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய அதிதி ராவ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

SCROLL FOR NEXT