ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் நேற்று (ஆகஸ்ட் 17) தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நிதி அகர்வால்
தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நடிகை நிதி அகர்வால், ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தானே உணவு பரிமாறி மகிழ்ச்சியூட்டி இருக்கிறார்.