சார்மி 
சினிமா

திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை - சிம்பு பட நடிகை திட்டவட்டம்

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன் என சிம்பு பட நடிகை தெரிவித்துள்ளார்.

 தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும்  'லிகர்' படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.  

இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: “தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” என தெரிவித்துள்ளார்.