சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல் 
சினிமா

திடீரென கவர்ச்சிக்கு மாறிய சிவகார்த்திகேயன் பட நடிகை

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடிகை அனு இம்மானுவேல் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 

அனு இம்மானுவேல்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல், அதில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள அவர், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. 

SCROLL FOR NEXT