தனுஷ், கே.வி.ஆனந்த் 
சினிமா

நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் - கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, நடிகர் தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.