சினிமா

விஜய் படத்தில் இருந்தது என் படத்திலும் இருக்கும்: சுசீந்திரன்

சூசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தின் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.

இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார். புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய library-ல் 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா', 'மாவீரன் கிட்டு' போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும். மிக பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்.

SCROLL FOR NEXT