‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக மெஹரீன் என்ற தெலுங்கு நடிகை இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தாயராகி இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
" `அறம் செய்து பழகு' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் `ஆதலால் காதல் செய்வீர்' போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்... இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம்... இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்... "