சினிமா

வருகிற 7-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

`விவேகம்' படத்தின் ரிலீசுக்கு முன்பாக தல அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்க `விவேகம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது.

மாலை மலர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரீலீசுக்கு முன்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இசை வெளியீட்டு முன்னதாக படத்தில் இடம்பெறும் 7 பாடல்களுக்கான ப்ரிவ்யூ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த ப்ரிவ்யூ வீடியோ வைரலாக பரவி வருகிறது. "ஏ.கே. தீம் மியூசிக்", "நெவர் கிவ் அப்", "காதலடா ரிப்ரைஸ்", "வெறியேற", "காதலாட", "தலை விடுதலை", "சர்வைவா" உள்ளிட்ட 7 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.