சினிமா

விஜய் ரசிகர்களுக்கு திடீர் விருந்து

விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், `மெர்சல்' படக்குழு விஜய் ரசிகர்களுக்கு திடீர் விருந்துகளை இன்ப அதிர்ச்சியாக வழங்கி வருகிறது.

மாலை மலர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

`ஆளப்போறான் தமிழன்', `நீதானே', `மெர்சல் அரசன்' உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில், `மாச்சோ' பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

அத்துடன் `மெர்சல்' படத்தில் இருந்து டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.