சினிமா

விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் துவங்கி இருக்கிறது.

சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூர்ளாவின் அடுத்த படமான சூர்யா 36 படத்தின் பூஜை புத்தாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், சூர்யா 36 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியிருக்கிறது. 

செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரிக்கும் இந்த படம் ஒரு த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை வரை நடைபெற இருக்கிறதாம்.

படம் 2018 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சூர்யா படமும் துவங்கி இருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

SCROLL FOR NEXT