சினிமா

சூர்யாவின் என்ஜிகே விரிவாக்கம் இதுவா?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு `என்ஜிகே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதிர் என்.ஜி.கே என்பதன் விரிவாக்கம் என்ன என்பது குறித்த தகவல் கசிந்திருக்கிறது. #NGK #Suriya

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்கள். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்ஜிகே' என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு வெளியானது முதலே `என்ஜிகே'-வின் விரிவாக்கம் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகள் உருவாகி வருகிறது. 

அதற்கு பதில் அளிக்கும் விதமாக `என்ஜிகே' என்பது படத்தில் சூர்யாவின் பெயர் தான் என்றும், படத்தில் அவருக்கு நந்த கோபாலன் குமரன் (Nandha Gopalan Kumaran (NGK)) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. 

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தோன்றத்தில் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி போஸ்டரில் உரிமைக்காக போராடும் உழைப்பாளர்களின் கைகள் அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இந்த படம் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படமாக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றுஅமைக்கப்பட்டு வருகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #NGK #Suriya