சினிமா

சூர்யாவுக்காக உருவாக்கப்படும் அம்பாசமுத்திரம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யாவின் 36-வது படத்திற்காக அம்பாசமுத்திரம் போன்ற பிரமாண்ட செட் அமைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #Suriya36

மாலை மலர்

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. தஞ்சாவூர் மற்றும் தென்தமிழகத்தில் படப்பிடிப்பை தொடர முடிவு செய்த படக்குழு அதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். 

சமீபத்தில் செல்வராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆறு இருக்கும் பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், இறுதியாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்த படக்குழு  திட்டமிட்டிருக்கிறதாம். 

இதையடுத்து அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றையும் படக்குழு தற்போது அமைத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்காக கலை இயக்குநர் விஜய் முருகன் தலைமையிலான குழு பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. #Suriya36