ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இருந்து பூம் பூம் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.