சினிமா

சூப்பர் ஸ்டாரின் எளிமை வியக்க வைக்கிறது: `காலா' நடிகை ஹுமாகுரேஷி

சூப்பர் ஸ்டாரின் எளிமை தன்னை வியக்க வைப்பதாக `காலா' படத்தில் அவருடன் நடித்து வரும் நாயகிகளில் ஒருவரான நடிகை ஹுமாகுரேஷி கூறியிருக்கிறார்.

இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கூறிய ஹுமாகுரேஷி....

“ரஜினி சாருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவரது எளிமை என்னை வியக்க வைக்கிறது. அவர் நடந்தால் அனைவரும் அவருக்கு அமைதியாக வழி விடுவார்கள்.

ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு எளிமையாக இருப்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. ரஜினி அருகே அசையாமல் மரம் போல நிற்க வைத்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன். அவ்வளவு சிறந்த மனிதர் அவர். ஆனால் ‘காலா’ எனக்கு ஸ்பெ‌ஷல் படம். காரணம், இது ரஜினி சார் படம். இதில் இயக்குனர் ரஞ்சித் எனக்கு பெரிய வேடம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT