சினிமா

`கலகலப்பு 2' படப்பிடிப்பில் இணைந்த மிர்ச்சி சிவா

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாக இருக்கும் `கலகலப்பு 2' படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மாலை மலர்

`கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதை முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவா `கலகலப்பு 2' படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கும் `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து புனே, வாரணாசி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

இதில் படக்குழுவினர் பலரும், நடிகர்கள் மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், மனோபாலா, வையாபுரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய படப்பிடிப்பு டிசம்பர் தொடக்கத்தில் முடிவடைகிறது. ஜனவரியில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா' படத்தின் பணிகளை சுந்தர்.சி. தொடங்க இருக்கிறார்.

கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `கலகலப்பு' படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.