சினிமா

சிம்பு - யுவன் கூட்டணியின் அடுத்த அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியிருக்கும் பாடல் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #RajaRanguski #NYT

மாலை மலர்

`ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 

'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் `நா யாருன்னு தெரியுமா' என்ற ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இந்த பாடல் மார்ச் 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. #RajaRanguski #NYT