சினிமா

ஒரே படத்தில் 7 வேடங்களில் நடிக்கும் சுருதி ஹரிஹரன்

வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்டெல்லா’ படத்தில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடித்து வருவதாக அவரே கூறியிருக்கிறார்.

மாலை மலர்

‘லூசியா’ படத்தின் மூலம் பிரபலம் ஆன கன்னட நடிகை சுருதி ஹரிஹரன். தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘நிபுணன்’ ‘சோலோ’ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ என்ற படத்தை தயாரிக்கிறார். வினோத்ராஜ் இயக்கும் இந்த படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக உருவாகிறது. இதில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடிக்கிறார். இது பற்றி கூறிய அவர், “ இது ஒரு பெண்ணை மையப்படுத்திய அறிவியல் சார்ந்த திரில்லர் படம். கன்னடத்தில் தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்திவருகிறேன். எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் 7 தோற்றங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட சுருதி ஹரிஹரன் திட்டமிட்டுள்ளார்.