சினிமா

கார்த்தி ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு

`சதுரங்க வேட்டை' இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இருந்து கார்த்தி ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

மாலை மலர்

`சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.