சினிமா

முதியோர்களின் விருப்பத்திற்கிணங்க திரையிடப்படும் `பாகுபலி-2'

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா இணைந்து நடித்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் `பாகுபலி-2' படத்தை முதியோர்களின் விருப்பத்திற்கிணங்க சிறப்பு காட்சியில் திரையிட சமூக அமைப்பு ஒன்று முடிவு செய்துள்ளது.

மாலை மலர்

`பாகுபலி' படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2', ரிலீசாகி 2 வாரங்களை நெருங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ.1227 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2'-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டியிருக்கிறது.

இந்நிலையில், `பாகுபலி-2' படத்தினை அன்னையர் தினத்தன்று சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு காட்சிக்கு சமூக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

இளைஞர் சமூக அமைப்பு ஒன்று, ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா பொறுப்பு வகிக்கிறார்.