சினிமா

ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்

‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக ராஜ ராஜ சோழனின் வரலாற்றை படமாக உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RajaRajaCholan #SPJananathan

மாலை மலர்

தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இதற்கு முன்பாக ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது தனது அடுத்த படமாக தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரபல சோழ அரசனான, ராஜ ராஜ சோழன்  பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி கணேசன் நடிப்பில் ஏற்கனவே ராஜ ராஜ சோழன் பற்றிய படம் உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RajaRajaCholan #SPJananathan