சூர்ப்பனகை பட போஸ்டர் 
சினிமா

சூர்ப்பனகை

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் முன்னோட்டம்.

மாலை மலர்

ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘சூர்ப்பனகை’. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது. ராஜசேகர் வர்மா தயாரிக்கிறார். 

படத்தை பற்றி ரெஜினா கூறியதாவது: “சூர்ப்பனகை என்ற பட தலைப்பே கனமான கதாபாத்திரத்தை கொண்ட கதை என்பதை உணர்த்தும். அதனால் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சூர்ப்பனகை என்ற கதாபாத்திரம் ரசிகர்-ரசிகைகள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி இருக்கும். 

இதற்கான பதிலை தியேட்டரில் பார்க்கும்போது, இன்ப அதிர்ச்சியாக இருக்கும். திகில், மர்மங்கள் நிறைந்த படம் என்பதால், இதற்கு மேல் விரிவாக சொல்ல முடியாது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் குற்றாலத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.” என அவர் கூறி உள்ளார்.