சினிமா

சூறகாத்து

நந்தகுமார், லீமா, சரவண சக்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூறகாத்து படத்தின் விமர்சனம்.

மாலை மலர்

கிராமத்தில் இருக்கும் பொதுமக்கள் பேய்கள், ஆவிகள் உண்மையாகவே ஊருக்குள் இருப்பதாக நம்பி வருகிறார்கள். இறந்து போன பெண் ஒன்று பேயாக ஊரை சுற்றி ஊர் மக்கள் பயமுறுத்தி வருகிறது. ஆனால் நாயகன் நந்தகுமார், பேய் என்பதே இல்லை இருக்கிறார். இதை மக்களுக்கும் புரிய வைத்து வருகிறார்.

நாயகன் நந்தகுமாரும், நாயகி லீமாவும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இதே ஊரில் இருக்கும் சரவண சக்தி, பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என்று இருக்கிறார். இந்நிலையில், மர்மமான முறையில் நாயகன் நந்தகுமார் கொலை செய்யப்படுகிறார்.

இறந்த நந்தகுமார் பேயாக மாறி அதே ஊரை சுற்றி வருகிறார். இவர் எப்படி இறந்தார்? நாயகி லீமாவை எப்படி பாதுகாத்தார்? ஊர் மக்களுக்கு பேய் இல்லை என்று புரியவைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் நந்தகுமாருக்கு இதுதான் முதல் படம். விறுவிறுப்பான நடிப்பாலும், பேயாக வந்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார். நாயகி லீமா அழகாக வலம் வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சரவண சக்தி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மனதில் பதியவில்லை.

பரிமளவாசன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாகவும், கேட்கும் படியாகவும் இருக்கிறது. பாடல் வரிகளும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பேய் பாடும் பாடல் சிறப்பு. கேசவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

பேய், ஆவிகள் பற்றி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதையாக இருந்தாலும், அதில் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ‘சூறகாத்து’ சுமாரான காத்து.