சினிமா

பிச்சை எடுத்த நடிகருக்கு உதவி

பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த விருச்சககாந்த் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவருக்கு நடிகர்கள், இயக்குனர் உதவி வழங்கியுள்ளனர்.

சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட விழாவின் போது அபி சரவணன் ஒரு காசோலையை விருச்சகாந்துக்கு வழங்கினார். மன்சூர் அலிகான் அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பெங்களூரை சேர்ந்த கிரிஷ், விருச்சககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதாக கூறினார்.