சினிமா

கமல்ஹாசனை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு

நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு அளித்து வரும் நிலவேம்பு கசாயம் நல்ல பலனை அளித்து வருகிறது. அதனை குடித்து யாரும் பக்கவிளைவை சந்திக்கவில்லை. காய்ச்சல், வி‌ஷ காய்ச்சல், டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மிக பெரிய நம்பிக்கையை தரும் மருந்தாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் “நிலவேம்பு கசாயம் குறித்து ஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை இயக்கத்தினர் நிலவேம்பு கசாயம் வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே கமலின் டுவிட்டர் பக்கத்தை நீக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழக இறையாண்மைக்கு எதிராகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபராகவும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு எடுத்து வரும் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை சொல்லி இருக்கிறார்.

தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் தவறான செயல்களை செய்து வரும் கமலை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.