கும்பகோணத்தில் பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
உலகத்தினர் நம் தமிழ் மொழியை அறிய தமிழ் இருக்கை கடந்த நூற்றாண்டே நடந்திருக்க வேண்டியது. உலக அரங்கில் தமிழ் இருக்கைக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கமல், வைரமுத்து போன்றோர் பணம் கொடுத்து அதற்கு உதவி செய்துள்ளனர். நம்முடைய மொழி, மாநிலத்தின் மொழி. இதற்கு தமிழக அரசு பெருந்தொகை செலவு செய்ய வேண்டும். செலவு செய்யும் என நம்புகிறேன்.
ஒவ்வொருவரும் அரசியல் களத்திற்கு வரும்போது அவரவருக்கு ஒரு கனவு இருக்கும். அதனை வைத்தே வருகிறார்கள். அதேபோல் கமல் களத்துக்கு வரும்போது அவரின் வலிமையான, நேர்மையான வழிமுறை வலுசேர்க்கும். அந்த இலக்குடன்தான் அவர் தனது நற்பணி மன்றத்தினருடன் களம் இறங்குகிறார். கமல் சிறந்த அறிவாளி. ஊழலுக்கு எதிரானவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து களம் இறங்கியுள்ள அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனாலும் கமலின் கனவு 100 சதவீதம் நனைவாகிறதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
ரஜினியும் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. களத்திற்கு வந்த பின்னர் கமல்-ரஜனி பற்றி மக்கள் தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.