சினிமா

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan

பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. `இன்று நேற்று நாளை' படம் ரிலீசாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவாகியிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் ரவிக்குமார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK13 #Sivakarthikeyan

SCROLL FOR NEXT