சினிமா

அப்போ எடுக்கல, ஆனா, இப்போ எடுத்துட்டேன் - சிங்கீதம் சீனிவாச ராவ்

பிரபல இயக்குனரான சிங்கீதம் சீனிவாச ராவ்விடம் பல பேர் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் அளித்திருக்கிறார். #NadigaiyarThilagam #SingeethamSrinivasaRao

மாலை மலர்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. இப்படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றியும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் "பலரும் நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா, எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் எடுத்ததில்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்" என எழுதி, சாவித்ரி வேடத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்.