சினிமா

மகத்தை அடித்து வரவேற்ற சிம்பு

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய மகத்தை நடிகர் சிம்பு, அவரை அடித்து வரவேற்றிருக்கிறார். #Simbu #STR #Mahat #BiggBoss2

அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜய்யுடன் ‘ஜில்லா’, சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத். இவர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

சுமார் 70 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறினார். இவரை அவரது நண்பரான சிம்பு அடித்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டது. இதனால் பிராச்சி, மகத்திற்கு இடையேயான காதல் முறிந்ததாக கூறப்பட்டது.