சினிமா

மீண்டும் ஏஏஏ கூட்டணி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #AAA #Simbu

மாலை மலர்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடல்ட் காமெடி படமான இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் இரண்டாம் பாகமும் உருவாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்தளவிற்கு இப்படம் இல்லாததாலும், சிம்புவின் நடவடிக்கைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்ததாலும் இரண்டாம் பாகம் உருவாகாமல் போனது.

தற்போது ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க இருக்கிறார் ஆதிக். அடுத்ததாக மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சிம்புவுடன் சில தவறான புரிதல்கள் தற்போது சரியாகிவிட்டதாகவும், சிம்புவுக்கு ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும், சிம்புவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது AAA இரண்டாம் பாகமாக இருக்காது என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AAA #Simbu #STR