சினிமா

பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி

சிம்புவுடன் 'காளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை, தற்போது புதிய படம் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார். #Simbu #STR #Vedika

மாலை மலர்

தமிழில் ‘மதராஸி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. இதனையடுத்து லாரன்ஸுடன் ‘முனி’, சிம்புவுடன் ‘காளை’, அதர்வாவுடன் பரதேசி, சித்தார்த்துடன் காவியத்தலைவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வேதிகா நடித்துள்ளார். தற்போது, வேதிகா பாலிவுட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தி பாடி’ (The Body) என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரிஷி கபூர், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஹாரர் – திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.