சினிமா

சிம்பு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

தமன்னா, ஸ்ரேயா, சானாகான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மஹத், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக இப்படம் வெளிவரவிருக்கிறது. முதல் பாகத்தில் ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ இரண்டு கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ள காட்சிகள் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.