சினிமா

1000 திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட நடித்திருக்கின்றனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் இன்னமும் ரிலீசாகவில்லை. இரு நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், டிரெய்லர் ரிலீசாகுமா என ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் டிரெண்ட் பாடல், ரோட்டுல வண்டி ஓடுது, ரத்தம் என் ரத்தம் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரைகளில் படம் ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.