சினிமா

சிம்புவின் `ஏஏஏ' படக்காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

இன்று ரிலீசாகும் சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே படம் ரிலீசாவதற்கு முன்பாக அவரது ரசிகர்களுக்கு என்று சிறப்பு காட்சிகள் போட்டுக் காட்டப்படும். அந்த வகையில் சிம்புவின் `ஏஏஏ' படமும் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்னையில் காலை 6 மணிக்கு திரையிடவிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை 11 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் போரூர் ஜி.கே.சினிமாஸ், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் மற்றும் ஆலந்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

SCROLL FOR NEXT