சினிமா

மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு அதிரடி

மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் கூறும்போது,

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2-ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார்.

சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.

இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும். என்றார்.

இந்நிலையில், அதற்கு மைக்கேல் ராயப்பனின் புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக சிம்பு கூறும் போது,

“ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போது, அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போது, என் மீது யாராவது புகார் கொடுத்தால், அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு படத்தில் நடித்து முடித்து அது திரைக்கும் வந்த பிறகு என் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பற்றி நான் தப்பாக பேச மாட்டேன்.”

இவ்வாறு சிம்பு கூறினார்.