சினிமா

விஷ்ணுவுக்காக ஆதியும், அந்தமுமாகிய சிம்பு

தமிழ் சினிமாவில் பலதிறமைகளை கொண்ட நடிகர்களுள் ஒருவராகிய சிலம்பரசன், தனது நண்பன் விஷ்ணு விஷாலுக்காக ஆதியும், அந்தமுமாகியிருக்கிறார்.

மாலை மலர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுதவிர ஜெயம்ரவியின் `வனமகன்' படமும், முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் `கதாநாயகன்' படமும் சிம்பு படம் ரிலீசாகும் அதேநாளில் ரிலீசாக உள்ளது.

இருந்த போதிலும் `கதாநாயகன்' படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில் சிம்பு தனது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது, `கதாநாயகன்' படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தனது நெருங்கிய நண்பன் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.