சினிமா

சிம்புவின் ஆங்கிலப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் சிம்பு இயக்கவிருக்கும் ஆங்கலப் படம் குறித்து சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

சமீபத்தில் இதுகுறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முதலில் `கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்' படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை மறுத்த சிம்பு, தான் இயக்கவிருக்கும் புதிய படம் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகிறது என்று கூறியிருந்தார்.

மேலும் தமிழ் மற்றும் சில முக்கிய மொழிகளில் அந்த படம் டப் செய்யப்பட உள்ளதாகவும் சிம்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் திரைக்கதையை சிம்பு எழுதி முடித்திருப்பதால் இந்த மாதம் முதல் அந்த படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. அக்டோபரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிகிறது. இந்த படத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் வசனங்களை எழுதுகிறார்.

கவுதம் தற்போது `துருவ நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தை முடித்து விரைவில் சிம்பு படத்தில் இணையவிருக்கிறார். அதேபோல் `ஸ்பைடர்' படத்தை முடித்த சந்தோஷ் சிவன் சிம்பு படத்தில் இணையவிருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.