சினிமா

சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசன் விலகவில்லை, நீக்கிவிட்டோம்: தேனாண்டாள் பிலிம்ஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகவில்லை என்றும் நாங்கள் தான் அவரை நீக்கினோம் என்றும் தேனான்டாள் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கதையின் முழு விவரத்தை தனக்கு தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி இந்த படத்தில் விலகுவதாக சுருதிஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தேனாண்டாள் நிறுவனத் தலைவர் ஹேமா ருக்மணி கூறுகையில், சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் அவராகவே விலகவில்லை. சில காரணங்களால் எங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டோம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT