சினிமா

அஜித் பாடலுக்கு நடனமாடும் சுருதிஹாசன் - வைரலாகும் வீடியோ

அஜித்தின் வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு துல்கர்சல்மானுடன், சுருதிஹாசன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ShrutiHaasan

2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இதில் முன்னணி மலையாள நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

சுருதிஹாசன் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பிரபல ஹீரோ வரிசையில் சிறந்த நடிகராக துல்கர்சல்மான் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு சுருதிஹாசன் விருது வழங்கினார். அப்போது துல்கர்சல்மானும், சுருதிஹாசனும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று இருவரும் நடனம் ஆட சம்மதித்தனர். இதையடுத்து அஜித்தின் ‘வேதாளம்‘ படத்தில் இடம் பெற்ற ‘ஆலுமா டோலுமா...’ பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தினார்கள்.

அஜித் பாடலுக்கு சுருதிஹாசனும், துல்கர்சல்மானும் இணைந்து ஆடியது அங்கு இருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. அனைவரும் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ யூடியூப்ப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது. #ShrutiHaasan

சுருதிஹாசன் நடனமாடும் வீடியோ: