சினிமா

நரகாசூரனுக்கு வில்லியாகிய ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா ‘நரகாசூரன்’ என்ற படத்தில் வில்லியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டதால், அந்த மாதத்தில் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதால் இப்படத்தில் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இன்னொரு தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்கவைக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்களாம்.

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ரேயா வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை கேட்டவுடனே இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம்.

SCROLL FOR NEXT