சினிமா

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, நீச்சல் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞர் அனுப்ஜகட் இந்த படங்களை எடுத்துக்கொடுத்துள்ளார். ஸ்ரேயா நீச்சல் உடையில் நீந்துவது போல் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

வழக்கமாக இது போல் கடலுக்கு அடியில் டூபிஸ் உடையுடன் நீந்தும் படத்தை ஹாலிவுட் நடிகைகள் தான் அதிகமாக வெளியிடுவார்கள். ஸ்ரேயா திடீர் என்று ஏன் இது போன்ற படங்களை எடுத்து வெளியிட்டார் என்பது தெரியவில்லை.