சினிமா

படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் செல்லும் ஷாருக்கான்

‘ஜீரோ’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக படப்பிடிப்புக்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #ShahrukhKhan #Zero

மாலை மலர்

ஷாருக்கான் நடித்து கடைசியாக வந்த ‘ஜப் ஹாரிமெட் செஜால்’ படம் வெற்றி பெறவில்லை. இதனால் தனது அடுத்த படமான ‘ஜீரோ’வை வெற்றி படமாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவர் குள்ள மனிதராக நடிக்கிறார். இதில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோரும் நடிக்கின்றனர்.



படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இரவு நேரத்தில்தான் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கி மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முடிக்கின்றனர். படப்பிடிப்புக்கு ஷாருக்கான் தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.

மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே ஷாருக்கான் ஹெலிகாப்டரில் வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தின் உரிமையை ஷாருக்கான் வாங்கி இருக்கிறார். இந்த படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்து அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ShahrukhKhan #Zero