சினிமா

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

பாலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஷாருக்கானின் மகள் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் பலர் அணுகுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #SuhanaKhan

சுகானாவுக்கு நடிகையாக ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நிருபர்களிடம் கூறும்போது “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும் தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன்பிறகு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்கும்படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்றார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SuhanaKhan

SCROLL FOR NEXT