1988-ஆம் ஆண்டு விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘செந்தூரப்பூவே’. இப்படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ். சிறப்பான கதையம்சமும், மனோஜ் ஜியான் இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும் அனைவரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம்.
இப்படத்தை தொடர்ந்து பி.ஆர்.தேவராஜ் விவேக்கை வைத்து ‘இளையராகம்’ என்ற படத்தை இயக்கினார். பின்னர் தெலுங்கில் சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த பி.ஆர்.தேவராஜ் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
பி.ஆர்.தேவராஜின் மறைவுக்கு பல்வேறு திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.