சினிமா

செம போத ஆகாதே படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa

அதர்வா நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப்போய் வந்த நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. 

`பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa 

SCROLL FOR NEXT